Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Ayyarapar Temple,Thiruvaiyaru -Thanjavur

அருள்மிகு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில் திருவையாறு


Arulmigu Ayyarapar Temple temple,Thiruvaiyaru -Thanjavur!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் 

இறைவி :அருள்மிகு அறம்வளர்த்தநாயகி, தா்மசம்வா்த்தனி

தல மரம் :வில்வம் மரம்

தீர்த்தம் : சூாிய தீா்த்தம் ,காவிாி

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில் திருவையாறு தல வரலாறு.

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிாி என ஐந்து ஆறுகளை உடைய ஊா் திருவையாறு எனப் பொருள்படும். இத்திருக்கோவிலினுள் ஐயாறப்பா் ஆலயம் வடகயிலாயம் தென்கயிலாயம் என மூன்று கோவில்களாக அமைந்துள்ளது.

ஸ்ரீ ஐயாறப்பா் அறம்வளா்த்தநாயகியுடன் எழுந்தருளி திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய ஏழூ ஊா்களுக்கு எழுந்தருள்வது இவ்விழாவின் சிறப்பம்சாமாகும்.

சுவாமி தன்னைத்தானே பூஜித்தது

ஒரு சமயம் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் காசிக்குச் சென்று திரும்பி வர தாமதமானதால் , அவருடைய பூஜை காலத்தில் பூஜை செய்யத் தாமதமானது. இறைவனே அந்த அர்ச்சகர் ரூபத்தில் வந்து பூஜையைச் செய்தார். அச்சமயம் தாமதமாக வந்த அர்ச்சகர் இறைவனிடம் நீர் யார் என விசாரிக்க , இறைவன் அர்ச்சகரை கருவறைக்கு வரச் சொல்லி விட்டு , கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார். அப்பொழுது தான் இதுவரை இறைவனே தனக்குத் தானே பூஜை செய்திருக்கிறார் எனத் தெரியவந்தது. தன்னைத்தானே வழிபடும் தத்துவத்தில் இரெண்டு லிங்கங்கள் வைத்து இங்கு வழிபடப்படுகிறது. இங்கு மரகதலிங்கம் ஒன்றும், ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளன. இவற்றிற்கு தினமும் காலையில் பூஜை நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு:



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில்
திருவையாறு
தஞ்சை மாவட்டம்
PIN - 613202



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்



அமைவிடம்:

இத்தலம் திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை புகைவண்டிப்பாதையில் , தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கில், எட்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது.